×

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?.. பாஜக பதில்


சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கு கட்டுப்பாட்டு அறை, கூட்ட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது சென்னை அமைந்தகரையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன்; மோடி ஒவ்வொரு இல்லங்களையும், வீடுகளையும் சென்றடைந்துள்ளார். வாங்க மோடி, வணக்கம் மோடி என. நரேந்திர மோடி ஒவ்வொரு கிராமத்திலும், வீட்டிலும் மோடி பற்றிதான் பேசுகிறார்கள். மோடி என்றால் Man of developing India. தமிழ்நாட்டிலும் வரும் நாட்களில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். எங்கள் கூட்டணி கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. மோடியின் தலைமையை விரும்புவோருடன் நட்புறவு தொடர்கிறது என கூறினார்.

 

The post தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?.. பாஜக பதில் appeared first on Dinakaran.

Tags : Alliance ,AIADMK ,Tamil Nadu ,BJP ,CHENNAI ,Arvind Menon ,Annamalai ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...